Friday, October 15, 2010

வீட்டிலிருந்தே வேலையா?.. சாத்தியமா ?.... நீங்களே டிசைட் பண்ணுங்க

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்
.

பிளாகர் மக்களே!
வணக்கம்.
ரொம்ப நாளைக்கப்புறம் இப்போ தான் இங்கே பதிவெழுதறேன்.
இதுவே இங்கே என் கடைசீ பதிவும் கூட.

..சணடை சச்சரவெல்லாம் இல்லை.. எல்லாம் நல்ல விஷயம் தான்.
போன வருஷம் Virtual Assistance பத்தி தொடர்பதிவு போட்டிருந்தேன் இல்லையா..
.. நானும் 3 வருஷமா working from home பண்ணி, இப்போ எனக்கே எனக்குன்னு
தள-முகவரி வாங்கியாச்சு.

இனிமே http://homepreneur-online.com/ இங்கே தான் பதிவெழுதலாம்ன்னு இருக்கேன்.
புது வீட்டுக்கு வந்து.. உங்க கருத்தை சொல்லுங்க... வாரம் ஒரு தமிழ் பதிவாவது போடணும்ன்னு ஆசை.

புது முகவரிக்கு வாங்க...
வாழ்க வளமுடன்.
தீபா கோவிந்த்

Read More...

Friday, March 06, 2009

நித்தியகண்டம் பூர்ண ஆயுசு

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்
.

பொதுவாகவே கிராமத்திலே யாரவது ரொம்ப வயசானவங்க இழுத்துகிட்டு இருந்தாங்கன்னா.. சொந்த பந்தத்துக்கேலாம் சேதி சொல்லியனுப்பி வரசொல்லிடுவாங்க. விஷயம் கேட்டதும் எல்லாரும் ஓடிவந்து என்ன-ஏதுன்னு விசாரிச்சு இனிமே என்ன பண்ணலாம்ங்கிரதை பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாப்பாருங்க.. எல்லாரும் வந்து.. இன்னும் என்ன – " எப்போ " ங்கிர நேரத்துக்கு காத்துகிட்டு இருக்கும்போது நம்ம ஆளு ( அதாங்க இப்பவோ அப்பவோன்னு இழுதுத்துகிட்டு இருந்தாரே ), சும்மா ஹீரோவாட்டம் ஜம்முன்னு எழுதிருச்சு கதை பேச ஆரம்பிச்சுடுவாரு. ஒண்ணும் தப்பில்லே... ஏதோ இப்பத்த கண்டத்திலேயிருந்து தப்பிச்சுட்டார்ன்னு எல்லாரும் சந்தோஷமா ஊரு திரும்பி வேலைய்யை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ( ஏதோ ஒரு படத்திலே வரா மாதிரி ... பரத் படம்ன்னு நினைக்கறேன் ... இந்த சம்பவம் உங்களுக்கு ஏமாற்றத்தை குடுத்தா... அதுக்கு உங்க தலையெழுத்து)

என்னடா கதை சொல்லறேனேன்னு பார்க்கறீங்களா?.. நேத்து ஒரு மீட்டிங்காக காத்திருக்கும்போது வலைமேஞ்சப்போ நாட்டுநடப்பெல்லாம் விஸ்தாரமா படிச்சேன். ( இத்தனை நாள் படிக்கலையா... உங்க வீட்டிலே செய்தித்தாளே இல்லையான்னெல்லாம் கேக்ககூடாது.. அப்புறம் நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திடுவேன்). அப்படி படிச்சுகிட்டு இந்த போது மனசுக்கு பட்டதின் வெளிப்பாடு தான் மேலே சொன்ன குட்டிகதை ( அப்புறம் அந்த தாத்தாவுக்கு என்ன ஆச்சு , அவர் என்ன சிரஞ்சீவியான்னெல்லாம் கேக்ககூடாது... இது வெறும் ஒரு உவமை தான்). சரி, இதுக்கும் நம்ம நேஷணல் நியூசுக்கும் என்ன சம்பதம்ன்னு தானே கேக்கறீங்க... ஏதோ என மனசுக்குப்பட்டதை சொல்லறேன்.

டிஸ்கி :- சரியான விவரங்களுக்கு கூகிளாண்டவரை அணுகவும்.. இது அரசியல் பதிவு அல்ல.


மிக சமீபத்தில் நடந்த லாஹூர் தாக்குதல். "டேய்! எங்க ஊருக்கு விளையாட வாங்கடா.. ஜாலியா இருக்கும்" ன்னு நம்பி போன இலங்கை அணிக்கு நேரிட வந்த தீவிரவாத-தாக்குதல், அதனால் அவங்களுக்கு வந்த மன-உளைச்சல், இனிமேல் பாக்கிஸ்த்தானில் கிரிக்கெட் மட்டும் இல்லை வேறே எந்த விளையாட்டும் "ஜாலியா" விளாயடமுட்யுமாங்கிர சந்தேகம், இன்னும் சொல்லப்போனால், அங்க மற்ற நாட்டுகளை அழைத்து எதையுமே ( பிசினஸ் மீட்டிங், இண்டெர்ணாஷணல் காண்பிரண்ஸ்) பயம் இல்லாமல் நிறைவேற்ற முடியாதுங்கிர பொதுவான அபிப்பராயம். ஆக மொத்ததி பாக்கிஸ்த்தானியர்களை தவிர வேறே யாராலையும் "நிம்மதியா" பால்-பாகெட் கூட வாங்க முடியாதுங்கிரது என் அபிப்பராயம். இதிலே கவனிக்கவேண்டியது லாஹூருக்கும் அம்ரித்சருக்கும் 45 KM தான் இடைவேளி. கொஞ்சம் மெனெக்கெட்டா நடந்தே போயிடலாம் இங்குட்டுக்கும் அங்குட்டுக்கும்.

அப்புறம், ரொமப நாளாவே நமக்கும், மேலே சொன்ன பாக்கிஸ்த்தானுக்கும் நடக்கும் காஷ்மீர் பிரச்சனை. என்னுடைய காஷமீரி சினேகிதியின் குடும்பம் 1990 ல் அங்கே இருந்து மூட்டை-முடிச்சு கட்டிகிட்டு பம்பாய் வந்துட்டாங்க... நிஜமாவே ஆளுக்கொரு மூட்டை.. அதிலே என்னவெல்லாம் இருந்துதோ அதுதான் அவர்களின் மொத்த சொத்து. மத்தெல்லாம் போனால் போகட்டும் உசுரோட தப்பிச்சோம்டா சாமின்னு வந்தவங்க தான். இப்போ நல்லா முன்னேறி, படிப்பு, உத்தியோகம்ன்னு செட்டிலாயிட்டாங்க.. ஏன் சொத்துகூட வாங்கிடாங்க. காஷ்மீரில் இல்லை, பம்பாயில். பாவம் அங்கள் – ஆண்டிக்கு மட்டும் கண்ணோரம் ரெண்டு துளி வந்து மறைஞ்சு போகும் ( காஷ்மீரை பற்றி பேசினால்), அவங்க பேரப்பிள்ளைகளேலாம் கஷ்மீரை India Map லே பார்த்ததோட சரி (ஆனால் , பக்கத்தில் இருக்கும் படத்தை க்ளிக்கு பாருங்க " Indian Claim" ன்னு போட்டிருக்கும்..No Man's Land மாதிரி ). வருத்தம் – அங்கலாய்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்காலத்தை நோக்கித்தான் இனிமேல் பயணம்ங்கிரதை எனக்கு சொல்லிக்குடுத்த குடும்பம் இது.


கொஞ்சம் அப்படியே கீழே வந்து கிழக்காலே பார்த்தோம்ன்னா பளிச்சுன்னு இருக்கும் பங்களாதேஷ். அங்கே, தாக்காவில் போன வாரம் நடந்த சில இராணுவப் படைவீறர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அரசாங்கத்துக்கு காவலாக கருதப்படும் ராணுவ வீரர்களில் சிலர், உயர் ராணுவ அதிகாரிகளையும், அவர்களை சார்ந்தவர்களை தயவு தாட்ஷண்யம் பார்க்காம சுட்டுகொண்ணு ரணகளம் பண்ணிட்டாங்க, sepoy Mutiny மாதிரி. இந்திய ராணுவத்தின் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக குடுப்போம்ன்னு நம்ம அரசாங்கமும் சொல்லியுருக்காம். இப்போ நிலமை ஏதோ பறவாயில்லை. ( ஆனாலும் பாவம்ங்க.. சடலங்களை பார்த்தா குலை நடுங்குது)

அப்புறம், இலங்கையில் நடக்கும் LLTE பிரச்சனை... இதை பத்தி நான் எதுவுமே சொல்லலைங்கோ... நம்மால பாட்டுவாங்க முடியாது.

உள்ளுரில் என்ன சச்சரவுக்கு பஞ்சமா.. அஸ்ஸாம் பக்கம் தொடரும் நக்ஸல் மற்றும் உல்பா தாக்குதல், வங்காளத்தில் மமதா பண்ணும் ரகளை, பங்களூரில் பிரமோத் முதாலிக் பண்ணும் லந்து.. அதுக்கு எதிர்மறையா குறல் குடுக்கும் சொபா-டேவின் சீதா-சேனா ( not to mention the Pink chaddi campaign), தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் , சத்தியம் காரணமாக சாஞ்சுகிட்டு இருந்த பங்குச்சந்தை மொத்தமாக சரிந்தது ன்னு பல பிரச்சனை.

இதனாலே நான் சொல்ல வரது என்னானா... வடக்கே பாக்கிஸ்தான் – காஷ்மீர் , இந்த லிஸ்ட்டில் சீனாவும் சேர்த்துக்கலாம், அப்புதம் மேற்க்கே பங்களாதேஷ், தெற்க்கே இலங்கை ன்னு நம்ம நாட்டுக்கு 3 பக்கத்திலே இருந்தும் பல நெருக்கடி,மற்ற பக்கங்களில் கடல் இருக்கோ தப்பிச்சோம். இப்படி பல பரிமாணங்களில் பிரச்சனைகளை சந்திக்கும் இந்தயாவுக்கு நித்திய கண்டம் ன்னு சொன்னா எப்படிங்க தப்பாகும்.


ஆனாலும் பாருங்க.. ஏதோ, எதையோ பண்ணி, நாமும் முண்டியடிச்சு முன்னுக்கு போயிட்டு இருக்கோம். மற்ற நாடுகளுள் எல்லாம் " இத்தனை பிரச்சனைகளையும் வச்சுகிட்டு எப்படி தான் இந்த 3rd world country நம்ம கிட்டே போட்டி போடும் நிலமைக்கு வளர்ந்திருக்கு" ன்னு யோசிக்கும்படி வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

--- இப்போ சொல்லுங்க.. இந்தியாவுக்கு நித்தியகண்டம் பூரண் ஆயுசு ன்னு நான் சொல்லறது சரி தானே !

Read More...

Tuesday, February 17, 2009

80 வயசு முதியோருக்கு இப்படி ஒரு மரணம் தேவயா??

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்
.

இது ஒரு உண்மை சம்பவம். பெயரும், இடமும் மாத்தியிருக்கேன்.

இது கதையோ, சமூக விழிப்புணர்வு கொண்ட கட்டுரையோ இல்லைங்க. சமீபத்திலே எங்களுக்கு மிகவும் பரிசயமான குடும்பத்திலே நடந்த ஒரு துயரமான சம்பவம். அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு.

திரு சர்மா தம்பதியினர்க்கு 80+ க்கு மேலே இருக்கும். அவர் பிறந்தது , வளர்ந்தது , வேலைக்குப் போய் ரிடையர்டு ஆனதுக் கூட இதே ஊர் தான். அதாவது ஒரே ஏரியாவிலே 2-3 தலைமுறையா குடியிருக்காங்க. அவருடைய தாத்தா காலத்திலேயிருந்து அதே வீடு, அதே பரிசயமான அக்கம்-பக்கத்து குடும்பம். காலம் மாற மாற, அக்கம்பக்கத்திலே இருக்கும் வீடெல்லாம் பிளாட்டாகவும், அடுக்குமாடி கடைகளாவும் மாறின. திரு.சர்மாவின் வீடும் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடைய சிலரஓட வீடுகள் மட்டுமே "அந்த நாள்" ஞ்யாபகத்தை நமக்கு நினைவுப்படுத்தியது. சுருக்கமா சொல்லணும்னா... இப்போ இவங்க ஏரியா ஒரு Prime locality. இங்க வீடு வாடைக்கு எடுக்கும் காசு இருந்தா , அந்த பணத்திலே கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியாவிலே ஒரு சூப்பர் பிளாட் வாங்கலாம்னா பாருங்க.

திரு.சர்மா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் 4 பேர். எல்லாரும் ( மற்ற எல்லாரையும் போல) வெளியூரிலும், வெளி-நாட்டிலும் செட்டில்லாயிருக்காங்க. வருஷா-வருஷம் 2 முறை வருவாங்க, வாரா-வாரம் எல்லாருமே போண் பண்ணி பேசுவாங்க. இங்க லோக்கலா சொந்தம்ன்னு சொல்லணும்னா கூடப்பிறந்தவங்களுடய குடும்பங்களும், 4 பசங்களுடைய மாமனார்-மாமியாரும் தான்.போண் பண்ணினால் 30 நிமிஷத்டிலே வரக்கூடிய தூரத்திலே தான் எல்லாடுமே. சர்மா தம்பதியரும் சரி, மற்றவர்களும் சரி, கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில இல்லைன்னாலும், extended family மாதிரி எல்லாரும் இவர்கள் வீட்டுக்கு வந்து-போய் தான் இருந்தாங்க. காரணம், ஒண்ணு இங்களுடைய வயசு, இன்னோண்ணு அதனால வரும் உடல்-பிரச்சனைகள். ஸோ, குடும்பத்திலே மற்ற நபர்களும், நண்பர்களும் அப்பப்போ போய்ட்டு வருவோம்.

கடந்த 2 வருஷமா சர்மா ஆண்டிக்கு உடம்புக்கு ரொம்பவே சுகப்படலை. அதனாலே அவருடைய மூத்த மகன் வெளிநாட்டிலிருந்து மூட்டை-முடிச்சு எல்லாம் கட்டி மைசூரு பக்கம் வதுட்டார். இவங்களும் கூடிய விரைவில் அவரோட மைசூரு போய் இருக்கிரதா முடிவு பண்ணிநாங்க. ஆனால் இங்க prime locality லே வீடு இருக்கே. வீட்டை பூட்டிவிட்டு போயிடலாம்ன்னு யோசிச்சா, இது commercial area. பின்கட்டு வழியா உள்ளே வந்து பூட்டியிருக்கும் வீட்டை தப்பு-தண்டா நடத்த பயன்படுத்திடுவாங்களொன்னு பயம். என்னதான் க்ரில் போட்டிருந்தாலும், வீட்டிலே ஆள் நடமாட்டம் இல்லைன்னு தெரிஙஞ்சா சும்மா விடுவாங்களா? அவங்களுக்கு பதுங்க ஒரு டம். ( I am not exaggerating, these kind of things do happen. This is reality)

என்ன தான் ஆனாலும் பிறந்து வளந்து வாழ்ந்து வந்த பூர்வீக வீட்டு. சட்டுன்னு விக்க மனசு வருமா. மன்சை ரொம்பவே திடப்படுத்தி ரெண்டுபேரும் வீட்டை வித்து எல்லாம் formality யும் முடிச்சு மைசூர் போயிடலாம்ன்னு ஒரு வழியா ஒத்துகிட்டாங்க. Word was out on the market. Commerical ஏரியாங்கரதால நிறையபேர் வந்தாங்க, விலைபேசினாங்க(estimated 6 -7 Crores). மைசூரில் இருக்கும் பிள்ளை இந்த விஷ்யமா வாராவாரம் இங்கே வருவார். பின்னாலே பிரச்சனை வரக்கூடாதுன்னு சர்மா அங்கிள் all Whilte வேணும்ங்கிரதிலே மட்டும் தெளிவா இருந்தார். இதனால விலை கம்மியாவந்தாலும் பரவயில்லைனுகூட அபிப்பராயப்பட்டார்.

இப்படி 1 வருஷம் ஆச்சு, full white க்கு யாரும் வரலை. அப்புறம் Economic recession ன்னு தள்ளிப்போச்சு. இதுக்கெல்லாம் நடுவே நாங்க எல்லாடுமே அப்பப்போ அவங்க வீட்டுக்கு போவோம், ஜாலியா இருப்போம், வருவோம். இன்னைக்கு வீடு வித்தா, அடுத்த வாரமே மைசூரு போகணும்ன்னு திட்டத்தோட இருந்தாங்க அங்கிளும் ஆண்டியும். அத்தியாவிசய தேவைக்கு உண்டான சாமான் விட்டு மற்றதெல்லாம் கூட டிஸ்போஸ் பண்ணிடாங்கன்னா அவங்க எவ்வளவு ஆர்வமா இருந்திருப்பாங்க.


இப்படி தான் ஒரு வெள்ளிக்கிழமை எல்லாரும் அவங்க வீட்டு போனோம். பங்கஷண் எல்லாம் இல்லை - நீ போகிராயா – நானும் வரேன் அப்படீங்கிரா மாதிரி ஒருத்தர் சொல்லி, இன்னொருத்தர் வரது. ஆண்டி எங்களுக்காக ஏதேதோ வாங்கி வச்சிருந்தாங்க. ஒரே கூத்தும் கும்மாளாமும்மா இருந்துது. (அடுத்த நாள் சனிக்கிழமை தானே.. லேட்டானாலும் பரவாயில்லை). ஒரு வழியா டாட்டா சொல்லி வீடு வர 10 - 10.30 ஆச்சு.

சரி, சனிக்கிழமை வீக்கெண்ட் மூடிலே இருந்துட்டோம். அடுத்த நாள் (ஞ்யாற்றுக்கிழமை) குடும்பத்தில் ஒருத்தர் சர்மா அங்கிள் கிட்டே பேசணும்ன்னு போண் போட்டிருக்கார், யாரும் எடுக்கலை. மொபைல் ட்ரை பண்ணியிருக்கார், அதுக்கும் பதில் இல்லை. இப்படி காலையிலே 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரைக்கும் பார்த்திருக்கார். மனசு படபக்க, அவர் இன்னொரு சொந்தக்காரருக்கு விஷயம் சொல்ல, பதறியடிச்சு சர்மா அங்கிள் வீட்டுக்கு போயிருக்கார். கேரேஜ் கதவு தாழ்ப்பாள் போடமல் இருக்கிரதை பாற்த்ததும் பீதியோட உள்ளே போய் பார்த்தவருக்கு ஒண்ணில்லே ரெண்டு அதிர்ச்சி. சர்மா அங்கிளையும் ஆண்டியையும் யாரோ கழுத்தை அறுத்து கொண்ணு போட்டிருக்காங்க. ( இந்த சம்பவத்தை இப்போ எழுதும்போது கூட என் கையெல்லாம் நடுங்குது !)


அப்புறம் போலீஸ் வந்தாங்க, விசாரணைன்னாங்க.. இன்னமும் அதே தான் சொல்லிகிட்டு இருக்காங்க. எங்களுக்கு எதுவும் புலப்படலை. அவங்க ரெண்டுபேருமே வயசானவங்க. சும்மா முழியை உருட்டி மிரட்டினாலே பயந்துபோய் காதிலே கைய்யிலெ இருக்கிரதை கழட்டிக் குடுக்கிர சுபாவம் தான் ரெண்டு பேருக்கும். இது மட்டு இல்லை, சின்ன வயசிலே வந்த ஒரு கட்டி (abcess) காரணமாக, சர்மா அங்கிளுக்கு ஒரு கால் ஊனமும் கூட. பயத்திலே உறைஞ்சு போவாரே ஒழிய ஊன்றுகோல் இல்லாம ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. ஆண்டிக்கு ஆஸ்துமா இருக்கு, சத்தமா "திருடன்" ன்னு கத்த கூட முடியாது. இப்படி இருக்க இவர்களை கொல்லத்தான் வேண்டுமா....

கடந்த 2 மாசமா வீட்டிலே தனியா இருக்கும் முதியோர்களை கொல்லவே ஒரு கொள்ளை-கூட்டம் கிளம்பியிருக்கிரதா பேசிக்கிராங்க. இன்னைவரைக்கும் எங்களுக்கெல்லாம் இந்த சம்பவுத்துக்கும் பின்னால் இருக்கும் காரணம் புதிராவே இருக்கு.ஒரு வயசுக்கப்புறம் வெளியூர் - வெளிநாட்டி க்ளைமேட்டெல்லாம் வயதானவர்களுக்கு ஒத்துப்போகிரதில்லை. The extent of paranoia is such that, parents are opting ( literally opting this) to live in an old-age home, rather than to stay by themselves at “their” - “home”.

Read More...

Friday, October 10, 2008

அப்பா(வி)சாமியின் கண்ப்யூஷண் - நீங்க தான் தீர்த்து வைக்கணும்

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்
.

ங்களுக்கு அப்பா(வி)சாமி நியாபகம் இருக்கா.. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனுஷர். அப்படி இப்படின்னு மாசக்கடைசீயிலே துண்டு விழாம குடும்பத்தை காப்பாத்தி வருபவர். அக்கம் பக்கம் இருக்கும் மனுஷங்க கிட்டே நலம் மட்டுமே கேக்கணும், என்னைக்குமே கடன் கேட்டுவிடக்கூடாதுன்னு ரொமப்வே ஜாகிரதையா காலத்தை ஓட்டுபவர். அவரையும் கனவு மெய்ப்படக்கூடும்ன்னு நம்பிக்கை குடுத்தவர் தான் நம்ம ரத்தன்- டாடா. என்னா இப்போ நியாபகம் வருதா.. இந்த அப்பா(வி)சாமி தான் நானோவின் முதல் கஸ்டமர்.

நேரம் இருக்கும்போது முழு பதிவும் படிங்க.. அவசரக்காரகளுக்கு இதோ சாராம்சம்.

பாவம் , இவர் என்ன படாடோபத்துக்காகவா கார் வாங்கணும்ன்னு நினைக்கறார்... எப்படியும் ஆபீஸ்லே மாங்கு மாங்குன்னு வேலை செய்யறோம்.. அதுவும் climate சரியில்லைன்னா இவர் பாடு திண்டாட்டம் தான்.. வெய்யில் காலத்திலே வாடி வதங்கி சோரற்ந்து போரதும்.. மழையிலே.. ரெயின்கோட்டுன்னு ஒண்ணை போட்டுகிட்டு முழுசா ஈரமாய் வந்து சேருவதும்... நினைச்சாலே சங்கடமா இருக்கு. இவருக்கு தேவை பகட்டு / பந்தா அல்ல.. an all weather vehicle... அவருக்கு தேவை.. 4 சக்கிரம் - 4 கதவு -1 கூரை- 4 பேர் உட்கார இடம் ...Ac / radio / power windows எல்லாம் கூட அவருக்கு வேண்டாம்.. அப்படிப்பட்டவருக்கு நானோ ஒரு "சாத்திய்மாகக்கூடும்" ங்கிர கனவு

சிங்கூரின் "சீதோஷண நிலை" யிலே இம்ப்ரெஸ்ஸாயி ரத்தன்ஜி நானோவுக்கான ஆயத்தங்கள் செஞ்சார். ஆனா நம்ம மமதாக்கா புண்ணியத்திலே அதே சிங்கூர் இப்போ " சீ தோஷமான நிலை" ங்க கட்டத்திலே வந்தது. முட்டை முடிச்சு எல்லாம் கட்டவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். அப்போ நம்ம அப்பா(வி)சாமி மனசு என்னமா நொந்து போச்சு தெரியுமா.. நம்ம "மிடில் கிளாஸ்" வர்கத்துக்கே வரக்கூடிய சிந்தனை தான் " ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. நான் ஆகாசத்திலிருந்து நட்சத்திரம் எதுவும் ஆசைப்படலையே... கொஞ்ச நாள் பல்லை கடிச்சு உழச்சால், சாத்தியமாகக்கூடிய கனவில் தானே ஆசைப்பட்டேன், for things beyond my control, ஏன் என் கனவை எல்லாருமா சேந்து ( மமதா ச-பார்டியஸ்ய) இப்படி நசுக்கறாங்க. எனக்கு கனவு காணும் அறுகதைக்கூட கிடையாதா".. ன்னு மனசுக்குள்ளேயே புலம்பி நொந்து நூடில்ஸாயிட்டார்.

ஒரு industrialist ன் கஷடமும், அரசியல்வாதியின் சாணக்கிய தத்துவவும் நம்ம அப்பா(வி)சாமியின் மூளைக்கு அப்பார்பட்டது. மமதாக்கா போட்ட கூச்சல்லிலே அவர் புத்திக்கு இவ்வளவுதான் தெளிஞ்சுது - தொழிர்ச்சாலைக்காக ரதன்ஜி வாங்கின இடத்தின் சொந்தக்கரர்களுக்கு ( விவசாயம் செய்து பிழைக்கும் பாமர மக்கள் , அதிலே சில பேருக்கு எழுதப்படிக்க கூட தெரியாது ).. தர்ப்போதைய நிலவரப்படி ஒரு துகைய்யை அவர் (சர்க்கருகு) குடுத்திருக்கார் ( அது சரியான உரிமையாளர்களுக்கு சரியான துகை கிடைச்சுதான்னு என்னை கேக்கதீங்க.. நானும் உங்களை மாதிரி தான்.. ). இதிலே சில பேருக்கு ஒரு இடத்துக்கு பதில் இன்னொரு ஏரியாவிலே இடம் பட்டா போட்டு குடுத்திருக்காங்க.. ( மறுபடியும் சொல்லறேன்... பட்டா விவகாரம் எல்லாம் எனக்கு தெரியாது ).

ஆனா மமதாக்கா.. இந்த துகை போதாதுன்னும்.., substitute ஆ குடுத்த இடம் "நல்லா இல்லை"ன்னு ரகளை பண்ணி ரதன்ஜி தொழில்ச்சாலியிலே வேலைக்கு வரவங்களை .. "தொண்டர்கள்" துவம்சம் பண்ணியிருக்காங்க.. வேறே வழி இல்லாம ரதன்ஜி மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி கிளம்பிட்டார். எப்படி நானே இண்டர்வ்யூலே "Promise is a promise " ன்னு நச்சுனு சொனாரோ.. அதே மாதிரி இந்த சம்பவத்து அவர் என்ன சொன்னார் தெரியுமா .. " If somebody points a gun to my forehead, I either ask him to leave me , or pull the trigger ".... அதாவது இங்கிட்டும் இல்லை .. அங்கிட்டும் இல்லைன்னு எவ்வளவு நாள் தான் இருக்கிரது.எல்லாருக்கும் அவங்க அவங்க வேலை - குடும்பம் - பிராரப்தம்ன்னு இல்லே..

ஸோ.. ரந்த்ன்ஜி இப்போ அஹமதாபாதில் ( நேரமும் காலமும் ஒத்துவந்தா அஹமதாபாத் ஒரு முறை போய் பாருங்க.. ரொம்ப அருமையான ஊர்.. முக்கியமா நவராத்திரி நேரத்திலே ஊரே களைடகட்டும்... .. இங்கே Society லே எப்படி "சிறந்த கொலு"க்கு பரிசு குடுப்பாங்களோ.. அதே மாதிரி அங்கே எந்த Society டைய "கர்பா - நடனம்" அர்புதமா இருக்குன்னு பரிசு எல்லாம் குடுப்பங்க.. தனி நபர் பரிசு , Schoool , college , Uniiversity லெவெல் கூட இது நடைபெறும்.... இந்த நவராத்திரி முடின்ஞிருச்சு... அடுத்த வருஷம் மறக்காம போயிட்டுவாங்க )... சாரி... மலரும் நினைவுகள்

நம்ம அப்பா(வி)சாமி இருக்காரே.. அவருக்கு ஒரு வினேதமான guilt. இவருக்கு நானோ ஒரு Motivation .. "அடையமுடியும் ன்னு நம்பிக்கை குடுத்த ஒரு concept". ஆனால், வரப்போகும் நானோ தொழில்ச்சாலைய்யை நம்பி சிங்கூர் மற்றும் அக்கம்பக்கத்து யூத்ஸ் சில பல Technical , Polytechnic , diploma course எல்லாம் கத்துகிட்டு வேலைய்யை எதிர்பார்த்து இருந்தாங்க. நம்ம மமதாக்கவின் வெற்றி ( "நானோவை நாங்க மண்டி போட வச்சிட்டோம்ல்லே.... " ன்னு சொல்லிகிட்டு திரியறாங்களாம் ) காரணமாக .. அவங்களுடைய வேலை மற்றும் முன்னேற்றத்தின் கனவு நினைவாகமேலே நசுங்கிடுச்சு. இவ்வளவு ஆனதுக்கப்புறமும் நமக்கு நானோ தேவையான்னு அப்பா(வி)சாமி யோசிக்கறார் ... பாவம் மனுஷர் இருதலை கொள்ளி எறும்பாட்டாம் ஆயிட்டார்.. இனிமேல் ஒவ்வொரு முறை நான் "என் நானோ"வை ஓட்டும்போது அந்த சிதைந்த கனவுகள் நிழலாய் வருமேன்னு வருத்தப்படரார்..

இவருக்கு எப்படி ஆறுதல் சொல்லரது ?.. என்ன ஆறுதல் சொல்லரதுன்னு எனக்கு தெரியலை... உங்களுக்கு புலப்பட்டால் சொல்லுங்களேன் ..

Read More...